தமிழ் பழக்கவழக்கங்கள் --- ஒர் எளிய புரிதல்


சங்க இலக்கியங்கள் , சைவ திருமுறைகள் , வைணவ ப்ரபந்தங்கள் , கந்தபுராணம் , திருமுருகாற்றுபடை, சித்தர் பாடல்கள் மற்றும் பல தமிழ் பக்தி இலக்கியங்கள் எதிலும் நாம் இந்து மதம் , இந்து வேதம் என்ற சொற்களை காண இயலாது.மேலும் தமிழ் மன்னர்கள் வடித்த கல்வெட்டுகளில் , செப்பெடுகளில் , பட்டயங்களில் என எங்கும் மேற்கண்ட சொற்களை காண இயலாது. ஏனெனில் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு நமது தமிழ் வ்ழிபாட்டு முறையில் சைவம் , வைணவம் , கௌமாரம் , சாக்கியம் , காணபதியம் , சௌரவம் என்ற ஆறு சமயங்களே இருந்தன. இதில் சைவம் சிவபெருமானையும் , வைணவம் திருமாலையும் , கௌமாரம் முருகனையும் , சாக்கியம் சக்தியையும் , காணபதியம் கணபதியையும் , சௌரவம் சூரியனையும் கடவுளர்களக கொண்டிருந்தன.ஆங்கிலேயர் இந்தியா முழுவதையும் ஆளத்தொடங்கியதும் நிர்வாக காரண்ங்களுக்காக இந்த ஆறு சமயங்களையும் , வட இந்திய பகுதிகளில் பரவி இருந்த வ்ட ஆரிய வேத மதத்தையும் ஒன்றக இணைத்து இந்து மதம் என பெயரிட்டனர்.அது முதல் தமிழர் சமயங்கள் , சமய பண்பாட்டு பழக்க வழ்க்கங்கள் , வழிபாட்டுமுறைகள் அனைத்தும் தமிழ் அடையளம் , தனித்தன்மை இழந்து , மறைந்து வட ஆரிய வேத மதமாகிய இந்து மதத்தின் ஆதிக்கத்திற்க்குட்பட்டுவிட்டது. தமிழர்களின் அனுபவ வாழ்வியல் நெறியான ஆறு சமயங்களும் காட்டிய நல்வழியிலிருந்து விலகிய நாம் இன்று இந்து மதம் , வேதம் , உபநிடதம் என்று புரியாத மொழிகளில் கூறப்படும் பல்வேறு மூட பழக்கவழ்க்கங்களுக்கு ஆட்பட்டுவிட்டோம்.
பொதுவாக சமயங்கள் அனைத்துமே தத்தமது மக்களின் வாழ்க்கையை நெறிப்படுத்தவும் , வளப்படுத்தவுமே வழிகாட்டுகின்றன. மேற்கூறிய ஆறு சமயங்களும் தமிழ்குடி தோன்றிய நாள் தொட்டு நமது முன்னோர்களாள் ,புவியியல் அமைப்பு, இயற்கை அமைப்பு , பருவ காலங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டன.மேலும் அவை பல்வேறு சாண்றோர்களாள் , அருளாள்ர்களாள் காலத்திற்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கையை வளப்படுத்தின.தமிழ் சமயங்கள் மக்களிடம் மிகச்சிறப்பான வாழ்க்கை தரத்தை உருவாக்கின.
போதும் என்ற எண்ணத்தையும் , சகோதரத்துவத்தையும் , சகிப்புதன்மையையும் , பிறருக்கு உதவும் எண்ணத்தையும் உருவாக்கி மிகச்சிறந்த சமுதாயத்தை உருவாக்கி வழிகாட்டின.பண்டய தமிழ் சமயங்களில் சாதி பாகுபாடுகள் இல்லை. அனைத்து மக்களும் ஒன்றாகவே பாவிக்கப்பட்டன்ர். அனைத்து மக்களும் அனைத்து கோவில்களிலும் பூசை செய்யவும் , திருமுறைகள் ஓதவும் , அனுமதிக்கப்பட்டனர்.அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் இறைவன் முன் சமமாகவே நடத்தப்பட்டனர்.
தமிழ் கோவில்கள் கல்வி கற்றுத்தரும் கல்வி கூடமாகவும் , வீட்டு வைபவங்கள் , ஊர் கூட்டங்கள் நடத்தும் இடமாகவும் , விளைபொருட்களை பதப்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் இடமாகவும் ,விளஙகின. கோவில்களில் கிடைக்கப்பட்ட பணத்தை கொண்டு ஊருக்கு தேவையானவற்றை அவர்களே செய்துகொண்டன்ர். கோவில்கள் ஒரு வங்கி போல் செயலாற்றின. கோவில் பணம் ஊர் மக்களுக்கு விவசாய தேவைகளுக்கு , வியாபார தேவைகளுக்கு வழங்கப்பட்டு வசூலிக்கப்பட்டன.
வட ஆரிய வேத மதத்தின் ஆதிக்கத்திற்க்குட்பட்டு பெருமை இழநது , மதிப்பிழந்த தமிழ் வழிபாட்டு முறைகளை மீட்டெடுக்க முயன்ற இராமலிங்க வள்ளளார் போன்ற பல அருளாளர்களும் , சித்தர்களும் முழுமையாக வெற்றியடைய முடியததன் காரணம் தமிழ் மக்களிடம் நமது தமிழ் வ்ழிபாட்டு முறைகள் பற்றிய புரிதல் இல்லாததே காரணம். அத்தகைய புரிதலை எற்படுத்தும் ஒரு சிறு முயற்ச்சியே இந்த வலைத்தளம்.
இடுகைகள் இல்லை.
இடுகைகள் இல்லை.